தமிழ் இலக்கியம்

கதை கேளு! கதை கேளு!

தாத்தா பாட்டி கதைகள் கேட்டிருக்கீங்களா? அவங்க சொல்ற கதைகளில் அவ்வளவு கருத்துக்கள் பொதிந்து இருக்கும். கதைகள் கேட்பவர்கள் மனதில் சிறு சிறு கருத்துக்களைச் தூவி விட்டுச் செல்லும் தன்மை கொண்டவை.

60, 70 வயதுடைய தாத்தா பாட்டிகள் சொல்லும் கதைகளிலேயே அவ்வளவு கருத்துக்கள் பொதிந்திருக்கும் பொழுது பல ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட நமது சங்க இலக்கியங்களில் எவ்வளவு அருமையான கருத்துக்கள் நிறைந்திருக்கும்! அதை அறிய ஆர்வமோ முயற்சியோ என்றாவது கொண்டிருக்கிறோமா?!

படிக்க ஆர்வமுண்டு நேரமில்லை என்பவர்க்கும் நேரமும் உண்டு ஆர்வமும் உண்டு ஆனால் படிக்க இஷ்டமில்லை என்பவர்க்கும் தமிழர்களாகிய நாம் அனைவருக்குமான பகுதி தான் இது!

நாம் இலக்கியங்களை தெரிஞ்சுக்கணும் என்கிற ஆர்வத்தை விதைங்க உங்க leisure time-ல கொஞ்சம் உங்க காதை கொடுங்க! கதையாக் கேட்டு தெரிஞ்சுக்கோங்க நம்ம இலக்கிய மென்பொருள்கள் முலமாக!

முதலில் ஆரம்பிங்க நம்ம சிலப்பதிகாரத்தை படிக்க.